FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புழல் காவல் நிலையத்தில் பூங்கா

புழல் காவல் நிலையத்தில் பூங்கா அமைத்ததன் மூலம், முன் மாதிரியான காவல் நிலையமாக விளங்குகிறது என பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பூங்காவாக மாறிய புழல் காவல் நிலைய வளாகம்.
பகிர்:

புழல் காவல் நிலையத்தில் பூங்கா அமைத்ததன் மூலம், முன் மாதிரியான காவல் நிலையமாக விளங்குகிறது என பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். 
சென்னை மாதவரம் காவல் துணை ஆணையர் கலைச்செல்வன் மேற்பார்வையில், 8 காவல் நிலையங்கள் மற்றும் 2 மகளிர் காவல் நிலையங்கள் என மொத்தம் 10 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. 
இவற்றில் வழக்குகளில் தொடர்புடைய இரு, நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் தேக்கம் அடைந்தன. இதனால் அங்கு புதர் மண்டியது. அதில், பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகள் பெருக்கம் அடைந்தன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. எனவே, இக்காவல் நிலையங்களை சீரமைக்க துணை ஆணையர் கலைச்செல்வன் உத்தரவிட்டு இருந்தார். முதல் கட்டமாக, புழல் மத்திய சிறைக்கு அருகாமையில் உள்ள எம்-3' காவல் நிலையத்தை சீரமைக்கத் திட்டமிட்டனர். 
இதில் வழக்கில் பதிவான பழைய வாகனங்களை அகற்றுதல், குப்பைகள் போல் காட்சியளித்த இடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்றன. மேலும் காவல் நிலையச் சுற்றுச்சுவர்களில் வண்ண ஓவியங்களை தீட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பயன்பாட்டில் இல்லாத இடத்தை சீரமைத்து, அதைப் பூங்காவாக மாற்றினர். அங்கு, வண்ண மீன்கள் தொட்டியமைத்தும், வகைவகையான மலர்ச்செடிகளை அமைத்தும், புல்தரை அமைத்தும் காவல் நிலையத்தை அழகிய பூங்காவாக மாற்றினர். புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளை வரவழைத்து இந்த பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வர்ணம் தீட்டும் பணிகளுக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளான இருவரை பயன்படுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments