ஏழாவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுமி சாவு
சென்னை சூளைமேட்டில் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேட்டில் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேபாளத்தைச் சேர்ந்த கோபால், தனியார் நிறுவன ஊழியர். சென்னை சூளைமேடு சித்ரா அவென்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 7-ஆவது தளத்தில் வசித்து வருகிறார். கீதா என்ற மனைவியும், சாரதா (எ) ஈஷா (4), நரேஷ் (1) ஆகிய இரு குழந்தைகளும் இருந்தனர்.
புதன்கிழமை இரவு தூக்கத்தில் இருந்து எழுந்த சாரதா வீட்டை விட்டு வெளியே வந்து, பால்கனி தடுப்புச் சுவரில் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் கால் இடறி சாரதா 7-ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்தாள்.
பலத்த காயமடைந்த சாரதாவை அங்குள்ளவர்கள் மீட்டு, எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சிறுமி சாரதா உயிரிழந்தாள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.