டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலர் அசோக்குமார் முந்த்ரா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இராம. கணேசன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சாவூர் கவிராயர் பேசுகையில், இன்றைய காலத்தில் ஒருவரது சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. ஆனால், பாரதியார் தனது கவிதைகள் மூலம் மக்களுக்கு என்ன கருத்தை சொன்னாரோ அதன்படியே வாழ்ந்தார். இன்றைய இளம் தலைமுறையினர் பாரதியின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவியப் போட்டிகள், பரதநாட்டியம் ஆகியவை நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ப.முருகன், பேராசிரியர் செ.செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.