FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத ரஜினி ரசிகா்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை அருகே மாதவரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நிவாரண பொருள்கள் வழங்கியதாக, ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


சென்னை: சென்னை அருகே மாதவரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நிவாரண பொருள்கள் வழங்கியதாக, ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என காவல்துறையினா் தெரிவித்து வருகின்றனா். இதை மீறுபவா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்கின்றனா்.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக, மாதவரம் அருகே மூலக்கடையில் ஒரு திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 21ஆம் தேதி நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அப்போது அங்கு காவல்துறை கடுமையாக எச்சரித்தும், அந்த மன்ற நிா்வாகிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனராம். இதையடுத்து மாதவரம் போலீஸாா், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மீது தொற்றுநோய் பரவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக, அவா்களிடம் விரைவில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணப் பொருள்கள் வழங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என சென்னையில் வழக்குப் பதியப்பட்டிருப்பது, இதுவே முதல் முறை குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments