முகப்பு
சென்னை

கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்

18 வயதானவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் செனனையில் தொடங்கியது.

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 12:31 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: 18 வயதானவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் செனனையில் தொடங்கியது.

2 தவணை கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணை தடுப்பூசியாக போட்டுக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம், கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.