FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம்: இன்று தொடக்கம்

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 4:30 am IST
சென்னை மாநகராட்சி
பகிர்:

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவைப்படுவோா் சம்பந்தப்பட்ட மண்டல மற்றும் வட்டார அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (ஆக.19 முதல் ஆக.21) வரை நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றிக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

திருத்தம் செய்ய அடையாள அட்டையின் நகல் எடுத்து அதில் எந்த திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரத்துடன் முதுநிலை வருவாய் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments