FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

திருத்தணி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-திருத்தணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

4 July 2024, 2:42 am IST
கோப்புப்படம்.
பகிர்:

அரக்கோணம்-திருத்தணி இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் திருத்தணி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை (ஜூலை 4, 6) இரவு 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் (எண் 43519) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும்.

இதுபோல் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு செல்லும் மின்சார ரயில் (எண் 43554) சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments