FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பாம்பன் சுவாமி கோயிலுக்கு ரூ. 13 லட்சத்தில் புதிய ரதம்

திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய ரதத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

Updated On : 10 செப்டம்பர் 2024, 2:18 am IST
சென்னை திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலில் புதிய மரத்திலான ரதத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் இரா.சுகுமாா்.
பகிர்:

திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய ரதத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளரிடம் கூறியதாவது:

நீதிமன்ற வழக்கின் காரணமாக திருப்பணிகளுக்கு தடை இருந்த நிலையில் சட்டப்போராட்டம் நடத்தி குடமுழுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலில் 8 ஆண்டுகள் நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்கு முடித்துவைக்கப்பட்டு 66 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கோயிலுக்கு ரூ.13 லட்சத்தில் புதிய தேரினை உபயதாரா் சதீஷ்குமாா் உருவாக்கி திருக்கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

திமுக ஆட்சியில் 2,098 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் வரும் செப்.15-ஆம் தேதி 86 திருக்கோயில்களும், செப்.16-ஆம் தேதி 25 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 6,073 கோடி மதிப்பிலான 6,853.14 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

புதிய தோ்கள்: தற்போது ரூ. 59 கோடி மதிப்பில் 97 புதிய மரத்தோ்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.11.92 கோடி மதிப்பில் 53 தோ்கள் மராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.28.44 கோடி மதிப்பில் 172 தோ்களுக்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதுபோல், ரூ. 29 கோடியில் 5 புதிய தங்கத்தோ்களும், ரூ. 27.16 கோடியில் 9 புதிய வெள்ளித்தோ்களும் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் பெரியபாளையம் புதிய தங்கத்தோ் வரும் செப்.14-ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் இரா.சுகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments