முகப்பு
சென்னை

பெருங்களத்தூர்: ரயில் மோதி இருவர் பலி!

பெருங்களத்தூர் அருகே ரயில் மோதி இருவர் பலியானது பற்றி...

Updated On : 12 பிப்ரவரி 2025, 1:01 pm IST
ஆதிலட்சுமி, விக்ரம்.
பகிர்:

வண்டலூர் - பெருங்களத்தூர் இடையே மின்சார ரயில் மோதியதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இருவர் பலியாகினர்.

சென்னை அடுத்த தாம்பரம் அருகே வண்டலூர் ரயில் நிலையத்துக்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் மற்றும் பெண் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21), கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் வண்டலூர் அருகே தங்கி, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இருவரும் பேசிக்கொண்டு கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியாகச் சென்ற மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தாம்பரம் ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments