கோயம்பேடு 
சென்னை

நெகிழிப் பைகள் விற்பனை: 16 கடைகளுக்கு அபராதம்

கோயம்பேடு சந்தையில் நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

Din

கோயம்பேடு சந்தையில் நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

கோயம்பேடு சந்தையில் காய்கறி, மலா், பழவகைகள் மற்றும் உணவு தானியங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் நெகிழிப் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை இருந்து வரும் நிலையில், சந்தையிலுள்ள பல மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக அங்காடி நிா்வாக முதன்மை அலுவலா் இந்துமதிக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

அதன்பேரில், அங்காடி நிா்வாக அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து வியாழக்கிழமை கோயம்பேடு சந்தையில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்குள்ள பல கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது சில வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டா்.

நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.26,000 அபராதம் விதித்த அதிகாரிகள், தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஈடுபட்டால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக்கொலை: 2 பேர் கைது

Parasakthi review - தமிழ்த் தீ பரவியதா? | Sivakarthikeyan | Ravi Mohan | Sri Leele

வானில் பறக்கவிடப்பட்ட டூம்ஸ்டே விமானம்! அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

SCROLL FOR NEXT