FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி

உணவகத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் பலி.

Updated On : 12 மார்ச் 2025, 7:57 pm IST
நட
பகிர்:

சென்னை: அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின், புதிய லிஃப்ட் மாற்றுவதற்கான பணிகள் இன்று(மார்ச் 12) பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திடீரென்று பழைய லிஃப்ட்டின் இரும்புக் கம்பி திடீரென்று அறுந்து, லிஃப்ட்டை சரி செய்ய வந்த ஊழியர் மேல் விழுந்து, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் விசாரணையில் பலியானவர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் என்பது தெரியவந்துள்ளது. லிஃப்டை சரி செய்ய வந்த ஊழியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments