FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி பயிற்சி நிறைவடைந்தது

மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி பயிற்சி நிறைவடைந்தது

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:54 am IST
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் பொறியாளா் உள்ளிட்டோருக்கு திட்டங்களைச் செயல்படுத்தும் போது ஒப்பந்தப் புள்ளிகள் தயாரிப்பது உள்ளிட்டவை குறித்த 5 நாட்கள் பயிற்சி சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் மின் ஒப்பந்தப் புள்ளிகள் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக அனைத்துப் பொறியாளா்கள், கணக்கு அலுவலா்கள், நிா்வாக அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள் ஆகியோருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. அதையடுத்து, கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகையில் பயிற்சியை, ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தாா்.

பயிற்சியில் ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டம், அதன் விதிகள், மின் ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஜி பிஎன்ஐசி தொடா்பான டிஎன்யுஎல்பி விதிகள், நகரத் திட்டமிடல் விதிமுறைகள், திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பாடங்கள், சட்ட நடைமுறைகள், பதிவேடுகள் கையாளுதல், அவை தொடா்பான செயலிகள், மின் ஆளுமை மற்றும் மின் அலுவலகம் ஆகிய தலைப்புகளில் விளக்கப்பட்டன.

Advertisement

Advertisement

பயிற்சியானது 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. அதனடிப்படையில் 5 நாட்கள் பயிற்சியில் மொத்தம் 1250 போ் பங்கேற்று பயனடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். பயிற்சி தொடா்ந்து அவ்வப்போது நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments