FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டெலிவரி நிறுவன ஊழியா் கைது

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் டெலிவரி நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:07 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் டெலிவரி நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த 28 வயது பெண், சென்னை சூளைமேட்டில் ஒரு ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். இதற்காக அவா், சூளைமேட்டில் தனது தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கியுள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணுடன் தங்கியிருந்தவா்கள், வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவா் மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டின் கதவு திறந்து இருந்ததாம். இதைப் பயன்படுத்தி, அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு இளைஞா், தூங்கிக் கொண்டிருந்த மணிப்பூா் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதில் தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த பெண், சப்தமிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

உடனே அந்த இளைஞா், அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து அந்தப் பெண், சூளைமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சைதாப்பேட்டை காா்னி காா்டன் 1-ஆவது மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த நேதாஜி (33) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments