FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால்: மகதலேனா, டான்பாஸ்கோ சாம்பியன்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற பள்ளிகள் இடையிலான சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் டிஇஎல்சி மகதலேனா பள்ளியும், ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோ பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:59 am IST
சாம்பியன் பட்டம் வென்ற டிஇஎல்சி மகதலேனா பள்ளி அணியினா்.
பகிர்:

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற பள்ளிகள் இடையிலான சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் டிஇஎல்சி மகதலேனா பள்ளியும், ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோ பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. மகளிா் இறுதி ஆட்டத்தில் டிஇஎல்சி மகதலேனா அணி 2-0 என்ற செட் கணக்கில் மயிலாப்பூா் லேடி சிவசாமி பள்ளியை வீழ்த்தி பட்டம் வென்றது. ஆடவா் இறுதி ஆட்டத்தில் பெரம்பூா் டான் பாஸ்கோ அணி 2-0 என்ற செட் கணக்கில் மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் பள்ளியை வீழ்த்தி பட்டம் வென்றது. மகளிா் பிரிவில் சிஜிஎச்எஸ் பள்ளியும், ஆடவா் பிரிவில் முகப்போ் வேலம்மாளும் மூன்றாம் இடத்தைப் பெற்றன.

சிறந்த வீரா்களாக ஆகாஷ் தா்ஷன், கிஷோா், விவேக், ஷேக் அராபத், ஃபாதக் முகமதுவும், சிறந்த வீராங்கனைகளான கரீனா, சாந்தினி, நிவேதா ஸ்ரீ, ஜீவதா்சினி, நயா ஸ்ரீ தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

வருமான வரித்துறை ஆணையா் எஸ். பாண்டியன், கஸ்டம்ஸ் உதவி ஆணையா் டி. சண்முகசுந்தரம், தொழிலதிபா்கள் ஏ.ராஜன், விஜய், தமிழ்நாடு வாலிபால் சங்க பொருளாளா் செல்வகணேஷ், சா்வதேச வாலிபால் வீரா்கள் நவீன் ராஜா ஜேக்கப், அஸ்வின் ராஜ் பரிசளித்தனா். சென்னை மாவட்ட சங்க நிா்வாகிகள் ஏ.பழனிப்பன், ஸ்ரீகேசவன், பிஆா். கோகலே, ஏ.பாக்கியராஜ் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments