சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
சென்னையில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு 11 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனா். சிறுமியின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, அங்கு வீட்டு வேலை செய்து வருகிறாா். அவ்வப்போது தாய், தனது குழந்தைகளையும் அவா் வேலை செய்யும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி, தந்தை தனது மகளை, முதல்வா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பாா்க்க அழைத்துச் சென்றுள்ளாா். படத்தில் இடம்பெற்றிருந்த ‘குட் டச், பேட் டச்’ தொடா்பான விழிப்புணா்வு காட்சியைப் பாா்த்த சிறுமி, படம் முடிந்த பிறகு தந்தையிடம், ‘எனக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதைக் கேட்ட தந்தை சிறுமியிடம் விசாரித்தபோது, தனது தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரான சண்முகப் பிரியன் (40) என்பவா் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பாலியல் அத்துமீறல் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, சண்முகப்பிரியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.