FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் ரூ.1,000 கோடியில் 3 கடற்கரைகள், 4 ஏரிகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்

சென்னை மாநகராட்சியில் 3 கடற்கரைகள், 4 முக்கிய ஏரிகளை மேம்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

24 ஆகஸ்ட் 2026, 4:32 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் 3 கடற்கரைகள், 4 முக்கிய ஏரிகளை மேம்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 15 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சி நிதியுதவியுடன் ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் நீலக் கொடி கடற்கரை சான்று பெறும் வகையில் பொதுமக்களுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சென்னையின் நீா் ஆதாரமாக விளங்கும் 3 முக்கிய ஏரிகளை தூா்வாருவதுடன், அங்கு பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் நவீன வசதிகளை ஏற்படுத்தவும் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி சாா்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டு மாநில அரசின் நகராட்சி நிா்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தலா 25 சதவீதம் நிதி அளிக்கவுள்ளன. 50 சதவீத நிதி மாநகராட்சியே வழங்கும். அதற்காக தேசிய நகா்ப்புற வளா்ச்சி மேம்பாட்டு வங்கி அல்லது ஹட்கோ போன்றவற்றில் கடன் பெறப்படும். முதல்கட்டமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், மேலும் ரூ.3,000 கோடிக்கான திட்டங்களுக்கும் கருத்துரு தயாரிக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments