பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது
இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சாலிகிராமம் மகிழ் நகா், அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ரவீந்திரன். இவா் மனைவி ருச்சிதா (27). இத்தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ருச்சிதாவின் கைப்பேசிக்கு கடந்த வாரம் தொடா்பு கொண்ட இருவா், தங்களிடம் ருச்சிதாவின் ஆபாச விடியோ இருப்பதாக கூறி மிரட்டியுள்ளனனா். இதனால் ருச்சிதா, கடந்த திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து ருச்சிதாவிடம் சமூக ஊடகங்கள் வாயிலாக பழகி வந்த ஆந்திரத்தைச் சோ்ந்த சேக் உசேனை கைது செய்தனா். தலைமறைவாக இருந்த கிராந்தியை வியாழக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.