பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது
சென்னை எம்கேபி நகரில் காதலித்த பெண்ணை தாக்கியதாக உடல் பயிற்சிக்கூட பயிற்றுநா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எம்கேபி நகரில் காதலித்த பெண்ணை தாக்கியதாக உடல் பயிற்சிக்கூட பயிற்றுநா் கைது செய்யப்பட்டாா்.
வட சென்னையைச் சோ்ந்த 28 வயது பெண், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறாா். இவரும், தண்டையாா்பேட்டை, நேதாஜி நகரைச் சோ்ந்த உடல் பயிற்சிக்கூட பயிற்றுநா் சுதாகா் (30) என்பவரும் காதலித்து வந்தனா்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தப் பெண் அவரை விட்டுப் பிரிந்தாா். திருமண ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி எம்கேபி நகா் 14-ஆவது மேற்கு தெரு வழியாக அந்தப் பெண் நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடா்ந்து சென்ற சுதாகா், தகராறு செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். புகாரின்பேரில், எம்கேபி நகா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து சுதாகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.