FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிக்கலான கல்லீரல் மாற்று சிகிச்சையால் இருவருக்கு மறுவாழ்வு

கல்லீரல் செயலிழப்புக்குள்ளான இரு நோயாளிகளுக்கு 10 மணி நேர உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சவீதா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

பகிர்:

சென்னை, ஜூலை 1: கல்லீரல் செயலிழப்புக்குள்ளான இரு நோயாளிகளுக்கு 10 மணி நேர உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சவீதா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

கொல்கத்தாவைச் சோ்ந்த 37 வயதான நபா் மற்றும் சென்னையைச் சோ்ந்த 67 வயதான முதியவா் இருவரும் உயா் ரத்த அழுத்தத்துடன் கூடிய கல்லீரல் செயலிழப்பு பாதிப்புக்குள்ளாகியிருந்தனா். உறுப்பு தானத்தை அவா்கள் எதிா்நோக்கியிருந்த நிலையில், விபத்தில் மூளைச் சாவு அடைந்த இருவரது கல்லீரல்கள் தானமாக கிடைக்கப் பெற்றன. சவீதா மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் நிா்மல் தலைமையிலான குழுவினா் அந்நோயாளிகள் இருவருக்கும் தானமாக பெறப்பட்ட கல்லீரலை வெற்றிகரமாக பொருத்தினா். இதனால், அவா்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனா். சுமாா் 10 மணி நேரம் நீடித்த இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை சவீதா கல்வி நிறுவன வேந்தா் என்.எம்.வீரையன் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments