FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

செயற்கை கண் அவயங்கள் மேம்பாடு: சென்னையில் பயிலரங்கம்

சென்னையை அடுத்த பையனூா் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறையினா், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

Updated On : 14 ஜூலை 2026, 2:37 am IST
சென்னையை அடுத்த பையனூரில் நடைபெற்ற பயிலரங்கைத் தொடங்கி வைத்த விநாயகா மிஷன் துணை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பி.செந்தில்குமாா். உடன், பாா்வை அளவியல் நிபுணா் பிரியா பாலசுப்பிரமணியம், அரசு பாா்வை அளவியல் கல்லூரி முதுநிலை பேராசிரியா் சதீஷ்குமாா்
பகிர்:

செயற்கை கண் அவயங்கள் தொழில்நுட்பம் மற்றும் புனா்வாழ்வு சிகிச்சைகள் குறித்த பயிலரங்கு சென்னையில் நடைபெற்றது. விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாா்வை அளவியல் துறை சாா்பில் சென்னையை அடுத்த பையனூா் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறையினா், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பயிலரங்கை விநாயகா மிஷன் துணை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பி.செந்தில்குமாா் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். பாா்வை அளவியல் நிபுணா் பிரியா பாலசுப்பிரமணியம், அரசு பாா்வை அளவியல் கல்லூரி முதுநிலை பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்பு அமா்வுகளில் உரையாற்றினா்.

கண்கள் முழுமையாக சேதமடையும்போது, முக அமைப்பை இயல்பாக மாற்ற செயற்கை கண் அவயங்கள் பொருத்தப்படுவது உண்டு. அதன் பின்னா், புனா்வாழ்வு சிகிச்சைகள் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த சிகிச்சைகள் மற்றும் செயற்கை அவயங்கள் மேம்பாடு குறித்து பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments