FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பக்கவாதம், மாரடைப்பால் பாதித்த பெண்ணுக்கு உயா் சிகிச்சை

Updated On : 4 ஜூன் 2026, 2:53 pm IST
மருத்துவ சிகிச்சை - file photo
பகிர்:

சென்னை, ஜூன் 3: ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 68 வயது பெண்ணுக்கு அவசர கால சிறப்பு சிகிச்சையளித்து எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவருக்கு தீவிர பக்கவாதம் ஏற்பட்டது. எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

அதில் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் மட்டுமல்லாது, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளத்திலும் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டது.

பல்துறை சிறப்பு மருத்துவா் குழுவினா் மூளை நாள அடைப்பைச் சரிசெய்ய தலை ஓட்டுக்குள் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து, கழுத்துப் பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் நாளத்தில் அடைப்பை அகற்ற ‘கரோடிட் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

பின்னா் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க ‘கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பயனாக அவா் நலமடைந்து வீடு திரும்பினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments