மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' சேவை: 1.86 லட்சம் பேர் பயன்
சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலி சேவையைப் பெற்று இதுவரை 1.86 லட்சம் பேர் பயனடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலி சேவையைப் பெற்று இதுவரை 1.86 லட்சம் பேர் பயனடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை மாநகராட்சி சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதில் அவர்கள் பெறும் வகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாட்ஸ் ஆப் செயலி ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் சொத்துவரி, தொழில் வரி, வணிகவரி உள்ளிட்ட 44 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ் ஆப் செயலியை 24 மணி நேரமும் மக்கள் பெறும் வகையில் தொடர்புகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தினமும் 600 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பிறப்புச் சான்றுகள் வாட்ஸ் ஆப் செயலி மூலம் சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றன.
Advertisement
Advertisement
மக்களுக்கு தாமதமின்றியும், அலைச்சலின்றியும் பிறப்புச் சான்றுகள் விநியோகிக்கப்படுவதுடன், காகிதமில்லாத பயன்பாட்டை சாத்தியமாக்கியும் உள்ளது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் வாட்ஸ் அப் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 2.14 லட்சம் பேர் அதை பதிவு செய்து பயன்படுத்திவருகின்றனர்.
அவர்களில் 1.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சேவைகளைப் பெற்று பயனடைந்துள்ளனர். அத்துடன் ஒருங்கிணைந்த கட்டணச் சேவைகள் மூலம் ரூ.43.76 கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.