முகப்பு
சென்னை

முதுநிலை மருத்துவ இடங்கள்: அரசு மருத்துவா்களுக்கு உத்தரவு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இடங்கள் பெற்ற அரசு மருத்துவா்களைப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

28 நவம்பர் 2026, 3:34 am
முதுநிலை மருத்துவ இடங்கள்: அரசு மருத்துவா்களுக்கு உத்தரவு
பகிர்:

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இடங்கள் பெற்ற அரசு மருத்துவா்களைப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பு:

நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2-ஆம் சுற்றில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற அரசுப் பணியிலுள்ள மருத்துவா்களை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு அப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

3-ஆம் சுற்றுக் கலந்தாய்வின்போது ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் மருத்துவா்கள் விதிகளின்படி அதை முன்னெடுக்கலாம். விரும்பாதவா்கள், வரும் 30-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். தவறினால், 2-ஆம் சுற்றில் ஒதுக்கப்பட்ட இடம் தானாகவே ரத்து செய்யப்படுவதுடன், 3-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பு வகுப்புகள் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.