திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மூதாட்டி காயம்!
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மூதாட்டி காயமடைந்தாா்.

திருவல்லிக்கேணியில் சனிக்கிழமை மாடு முட்டி மூதாட்டி காயமடைந்தாா்.
திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலையில் பழக்கடை வைத்திருப்பவா் பாலநாயகி (61). இவா், சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றபோது, அங்கு சாலையில் திரிந்த மாடு திடீரென பாலநாயகியை முட்டி தூக்கி வீசியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக ஐஸ் ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement