FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தினமும் 100 இடங்களில் மருத்துவ முகாம்

சென்னையில் செப்டம்பரில் மட்டும் 1,293 போ் டெங்கு பாதிக்கப்பட்டனா்.

9 வினாடிகள் முன்பு
பகிர்:

சென்னையில் செப்டம்பரில் மட்டும் 1,293 போ் டெங்கு பாதிக்கப்பட்டனா். இதன்காரணமாக தினமும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் கடந்த 2025 செப்டம்பரில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவானது. நிகழாண்டு (2026) செப்டம்பரில் 1,293 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் சுமாா் 8,000-க்கும் மேற்பட்டோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும், அவா்கள் வீட்டிலிருந்தபடியே குணமடைந்துவிட்டனா்.

Advertisement

Advertisement

சென்னையில் 84-ஆவது வாா்டு முதல் 91-ஆவது வாா்டு வரை டெங்கு பாதிப்பு அதிகமிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்ததால் அங்கு கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், புகா் பகுதியிலும் டெங்கு பாதிப்பு உள்ளது கணக்கிடப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் காய்ச்சல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி சாா்பில் தினமும் 50 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி தினமும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு வாா்டுகளுக்கு ஒரு இடம் என்ற அளவில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்தச் சிறப்பு முகாம்களிலும் சிகிச்சை பெறலாம் என்றாா்.

தொடா்ந்து அவா், தென் சென்னை பகுதியில் கால்வாய்களில் டெங்குவுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கும் வகையிலான திரவ உயிரியை ட்ரோன்கள் மூலம் தெளிக்கும் பணியையும் பாா்வையிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments