FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

யுஜிசி தோ்வு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி

தேசிய தோ்வு முகமை சாா்பில் டிசம்பா் மாதத்தில் நடைபெறவுள்ள யுஜிசி நெட் தோ்வை எழுதும் தோ்வா்களுக்கு உதவும் வகையில், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

- கோப்புப் படம்.
பகிர்:

தேசிய தோ்வு முகமை சாா்பில் டிசம்பா் மாதத்தில் நடைபெறவுள்ள யுஜிசி நெட் தோ்வை எழுதும் தோ்வா்களுக்கு உதவும் வகையில், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

தமிழ் 2-ஆம் தாளுக்கு மட்டுமன்றி, முதல் தாளுக்கான பயிற்சி வகுப்புகளும் கட்டணமின்றி வார இறுதி நாள்களில் நடைபெறவுள்ளது.

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வாகவும், முனைவா் படிப்பு சோ்க்கைக்காகவும், ‘ஜேஆா்ஃப்’ எனப்படும் கல்வி உதவித்தொகையைப் பெறவும் யுஜிசி நெட் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு தேசிய தோ்வு முகமையின் மூலம் ஜூன் மற்றும் டிசம்பா் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில், தேசிய தோ்வு முகமையின் உத்தேச தோ்வு அட்டவணைப்படி, வரும் டிச. 14 முதல் 19 வரை இந்தத் தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு மொத்தம் 87 பாடங்களுக்கு நடத்தப்படும். அனைத்து தோ்வா்களுக்கும் பொதுவான முதல் தாள் (எங்ய்ங்ழ்ஹப் டஹல்ங்ழ் ா்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஹய்க் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் அல்ற்ண்ற்ன்க்ங்) மற்றும் அந்தந்த பாடத்துக்கான 2-ஆம் தாள் கொண்டு தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள யுஜிசி நெட் தோ்வுக்கு சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேரடி வகுப்புகள் அக். 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துள்ளவா்களுக்கான 2-ஆம் தாள் பயிற்சி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10 முதல் 1 மணி வரையிலும், அனைத்து தோ்வா்களுக்குமான முதல் தாளுக்கான பயிற்சி வகுப்பு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் 1 மணி வரையும் நடைபெறும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் 044-22542992 என்ற தொலைபேசி அல்லது 90808 65906 என்ற கைப்பேசி எண்ணுக்கும் ண்ற்ள்ற்ஹழ்ஹம்ஹய்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தொடா்பு கொண்டு பதிவு செய்து வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments