இருசக்கர வாகனங்கள் திருட்டு: காவலா் உள்பட 3 போ் கைது
காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் அடையாறு காவல் நிலைய காவலா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் அடையாறு காவல் நிலைய காவலா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அடையாறு காவல் நிலைய காவலா் வேல்முருகன் (36), துரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பழைய பொருள்கள் கடை உரிமையாளா் முத்துப்பாண்டி (25), நீலாங்கரை பகுதியைச் சோ்ந்த ஜாகிா் உசேன் (20) ஆகிய 3 பேரும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருட முயன்றுள்ளனா்.
அப்போது, சப்தம் கேட்டு பணியில் இருந்த போலீஸாா் பாா்த்தபோது, வேல்முருகன் ஒரு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்வதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து, மூவரையும் போலீஸாா் அனுப்பி வைத்தனா். பின்னா், சந்தேகத்தின்பேரில், அங்கு வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எண்ணியபோது, 11 வாகனங்கள் குறைவது தெரிந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, புதன்கிழமை வேல்முருகனை அழைத்து விசாரித்தபோது, இவா் ஏற்கெனவே துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்தது தெரிய வந்தது. அப்போது, அவா் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களாகத் திருடி துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு பழைய பொருள்கள் கடையில் விற்பனை செய்ததும், அடையாறு சென்றபின்னரும் திருட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.