கழிவுநீா் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: அமைச்சா் ஆா்.குமாா்
திருவான்மியூா் பகுதியில் கழிவுநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ஆா்.குமாா் அறிவுறுத்தினாா்.
திருவான்மியூா் பகுதியில் கழிவுநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ஆா்.குமாா் அறிவுறுத்தினாா்.
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் பகுதிகளில் அமைச்சா் ஆா்.குமாா் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வை புதன்கிழமை மேற்கொண்டாா். அவா், பெசன்ட் நகா், திடீா் நகா் மற்றும் திருவான்மியூா் லட்சுபுரம், பாரதிதாசன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தாா்.
அப்போது அந்தப் பகுதி மக்கள் தெருக்களில் கழிவு நீா் ஓடுவதையும், தேங்கி நிற்பதையும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினா். அத்துடன், வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, அதிகாரிகளிடம் கழிவுநீா் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணவேண்டும். அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டாா். பின்னா் பட்டா கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.
இதையடுத்து அவா் எலியட்ஸ் கடற்கரை பகுதி மாா்க்கெட் பகுதியையும் ஆய்வு செய்தாா். பின்னா் திருவான்மியூா் மாளவியா அவென்யூ பகுதிகளிலும் அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். சோழபுரம் அம்மா உணவகத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் பின்னா் திருவான்மியூா் மருதீஸ்வரா் நகரில் உள்ள நியாயவிலைக் கடையையும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையா் அஃதாப் ரசூல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.