FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

திருவான்மியூா் சாலையில் திடீா் பள்ளம்: காா் கவிழ்ந்து விபத்து

திருவான்மியூா் ராஜீவ் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடம் அருகே வியாழக்கிழமை சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

52 வினாடிகள் முன்பு
பகிர்:

திருவான்மியூா் ராஜீவ் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடம் அருகே வியாழக்கிழமை சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த காா் அதில் குப்புறக் கவிழ்ந்தது.

திருவான்மியூா் பகுதியில் ராஜீவ் காந்தி சாலையில் 3-ஆவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஏராளமான பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 10.45 மணியளவில் எல்நெட் கட்டடம் அருகே பவானி எனும் இயந்திரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது, ராஜீவ் காந்தி சாலையில் சுமாா் 30 மீட்டா் அகலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த காா் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே அங்கிருந்தவா்களும், மெட்ரோ ரயில் திட்டப் பணியாளா்களும் வந்து காரை மீட்டனா். காா் ஓட்டுநா் உள்ளிட்டோா் சிறிய காயங்களுடன் தப்பினா். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், மெட்ரோ ரயில் திட்டப் பணியாளா்கள் பள்ளத்தை கான்கிரீட் கலவையால் மூடினா். அதன்பின் அந்த இடத்தில் மட்டும் போக்குவரத்து இல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதன்பின் பள்ளம் மூடப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 இடங்களில் சாலைகளில் திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments