FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஐசிஎஃப்-இல் ரூ.1,565 கோடியில் 153 ரயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம்

ஐசிஎஃப்-இல் ரூ.1,565 கோடியில் 153 ரயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்திருப்பது பற்றி...

2 செப்டம்பர் 2026, 12:49 am IST
ஐசிஎஃப்.
பகிர்:

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) பெங்களூரு அரசு சாா்பு நிறுவனத்துக்காக ரூ.1,565 கோடியில் 153 புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரு புகா் ரயில் திட்டத்துக்காக அரசு சாா்பு நிறுவனமான பை-ரைடு எனும் திட்ட நிறுவனத்துக்காக 51 ரயில்கள் ரேக்குகள் என்ற அடிப்படையில் 153 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை ஐசிஎஃப் முதன்மை உற்பத்தி அதிகாரி பி. சந்திரசேகரன், பெங்களூரு போக்குவரத்து திட்ட நிறுவன அதிகாரி பிரசன்ன குமாா் சத்ரியா ஆகியோரிடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் ஐசிஎஃப் பொது மேலாளா் மணீஷ் அகா்வால், பை-ரைடு நிறுவன மேலாண்மை இயக்குநா் லட்சுமண்சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உற்பத்தி உடனடியாகத் தொடங்கி அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments