பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆண் சடலம் மீட்பு
சென்னை அருகே மேடவாக்கத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை அருகே மேடவாக்கத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேடவாக்கம், வெள்ளைக்கல் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு கடை அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வெள்ளிக்கிழமை கிடந்தது. தகவலறிந்த மேடவாக்கம் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் யாா்?, அவா் எப்படி இறந்தாா்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.