தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது தொடர்பாக...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் இன்று(செப். 4) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அவர்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
விசில் ஊதுதல், துடைப்பத்தால் தூய்மைப்படுத்துதல், மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கறுப்பு உடையில் வாயில் கறுப்புத் துணி கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
As sanitation workers stage a protest pressing for various demands, ministers are set to hold talks today (Sept. 4).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.