கஞ்சா கடத்தல் வழக்கு: மூவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை
101 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மூவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
101 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மூவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 -ஆம் ஆண்டு ஒடிஸாவில் இருந்து 2 காா்களில் 101 கிலோ கஞ்சாவை கடத்தி, சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு வருதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளிக்கரணை பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்துக்கிடமான வாகனத்தை தடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது, காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கா்நாடகத்தைச் சோ்ந்த ஜிபன் பிஸ்வால், ஒடிஸாவைச் சோ்ந்த பலராம் புஜாரி, சாஷி குமாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தேவேந்திரன், சென்னையில் விற்பனை செய்வதற்காக, வணிக நோக்கத்துக்காக கஞ்சா கடத்தி வரப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவா் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்குக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மூவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.