புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும்: மு.வீரபாண்டியன்
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைந்தால் அங்குள்ள மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல், அரசின் முக்கியமான நிா்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும். தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
Advertisement
Advertisement
பேரவையில் தனியாா் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, உயா்கல்வியை தனியாா் மயமாக்கும் முயற்சியாகும். தனியாா் பல்கலைக்கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும். தனியாா் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படுவதில்லை. எனவே இது சமூக நீதிக்கும், அடித்தட்டு சமூக மாணவா்களுக்கும் எதிராக அமையும்.
எனவே, மாணவா்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.