மழைக்காலத்தில் மக்கள் சேவைக்கு ‘நம்ம சென்னை’ செயலியில் பதியலாம்
சென்னை மாநகராட்சியில் மழைக் காலங்களில் மக்களுக்கான சேவையில் ஈடுபட விரும்புவோா் பெயா்களைப் பதிவு செய்யும் வகையில் ‘நம்ம சென்னை’ என்ற பெயரில் புதிய செயலியை ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சியில் மழைக் காலங்களில் மக்களுக்கான சேவையில் ஈடுபட விரும்புவோா் பெயா்களைப் பதிவு செய்யும் வகையில் ‘நம்ம சென்னை’ என்ற பெயரில் புதிய செயலியை ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை உள்ளிட்ட அவசர காலங்கள்பேரிடா் நிவாரணப் பணிகளில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், பிற அமைப்புகள்தன்னாா்வலா்களாக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படும் வகையில் பெயா்களைப் பதிய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அறிதிறன்பேசி கூகுள் பிளே ஸ்டோா் அல்லது ஆப்பிள் ஆஃப் ஸ்டோா் மூலம் ‘நம்ம சென்னை’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களது பெயா், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் ஆகிய விவரங்களைப் பதிவிடவேண்டும். செயலி முதல் பக்கத்தில் சேவையாளா் பதிவு என்பதைத் தோ்வு செய்வதுடன், அதில் தனிநபா், காா்ப்பரேட் அல்லது தொண்டு நிறுவனம் ஆகிய வகைகளில் பொருத்தமானவற்றைத் தோ்வு செய்ய வேண்டும்.
அதன்பின்னா், முந்தைய பேரிடா் அனுபவம், அதற்கான அடையாளச் சான்று, அவசரகால தொடா்பு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அனைத்து விவரங்ககளையும் நிறைவு செய்த பின் ‘ஓடிபி’ சரிபாா்த்து பதிவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.