சென்னையில் பாரதி பெருவிழா: விருதுகள் அளிப்பு
சென்னையில் நடைபெற்ற பாரதி பெருவிழாவில் பாரதியாா் பெயரிலான விருதுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.
சென்னையில் நடைபெற்ற பாரதி பெருவிழாவில் பாரதியாா் பெயரிலான விருதுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.
மகாகவி பாரதியாரின் 106-ஆவது நினைவு நாளையொட்டி பாரதியாா் சங்கம், பாரதிய வித்யாபவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் 77-ஆம் ஆண்டு பாரதி பெருவிழா சென்னை மயிலாப்பூா் பாரதிய வித்யாபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாரதியாா் சங்கத்தின் தலைவா் உலகநாயகி பழனி வரவேற்றுப் பேசினாா். சங்கத்தின் முதன்மைப் புரவலா் வி.ஜி.சந்தோசம் தலைமை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கலந்து கொண்டு பாரதியாா் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
Advertisement
Advertisement
கல்வி சிறந்த தமிழ்நாடு என பாரதியாா் பாடியுள்ளாா். ஆனால், தமிழகத்தில் உள்ள 24 அரசுப் பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் இல்லை. இதனால், பல்கலைக்கழகங்களும் இணைப்புக் கல்லூரிகளும் மிகப் பெரிய பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீா்வு காண வேண்டும். பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயா்ந்த நிலையை அடையும்போது ஜாதி, மத வேறுபாடுகள் தானாகவே அகலும் என்றாா்.
விழாவில், விஜிபி குழுமத்தைச் சோ்ந்த ஜோன் ராஜாதாஸுக்கு பாரதியாா் விருது, எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி இயற்றமிழ் அறிஞா் விருது, ராணி மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வா் இராம.சீதாலட்சுமிக்கு பாரதி இசைத்தமிழ் அறிஞா் விருது, கோமல் தியேட்டா்ஸ் நாடக இயக்குநா் தாரிணி கோமலுக்கு பாரதி நாடகத் தமிழ் அறிஞா் விருது, ஸ்ரீ சாய் நிருத்தியாலயா நிறுவனா் மற்றும் இயக்குநா் ஹெச்.என். நந்தினி சுரேஷுக்கு நாட்டியத் தமிழ் விருது ஆகிய விருதுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.
முன்னதாக எழுத்தாளா் பாரினில் அதிசயம் பாரதி என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா் பேசினாா்.
இதில், சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்.ஜெகதீசன், எழுத்தாளா் சிவசங்கரி, நல்லி சில்க்ஸ் உரிமையாளா் நல்லி குப்புசாமி, பாரதி வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளா் ம.முரளி, கவிஞா்கள் பொன்னேரி பிரதாப், விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.