FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காா் சைலன்சரில் நெருப்பு: சாகசம் காட்டிய ஓட்டுநருக்கு போலீஸ் வலை

காா் சைலன்சரில் நெருப்பு: சாகசம் காட்டிய ஓட்டுநருக்கு போலீஸ் வலை

13 செப்டம்பர் 2026, 1:47 am IST
பகிர்:

சென்னை ஈசிஆா் சாலை பாலவாக்கம் பகுதியில், காரின் சைலன்சரில் இருந்து நெருப்பை வெளியேற்றி  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை ஈசிஆா் சாலை பாலவாக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் சில இளைஞா்கள் தங்களது காரின் சைலன்சரை மாற்றியமைத்து , தொடா்ந்து நெருப்பை வெளியேற்றி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. பெரும் சத்தத்துடன் நெருப்பை கக்கியபடி சீறிப்பாய்ந்த காரால், அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவியதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, காா் என்னை கொண்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments