விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு!
விநாயகா் சதுா்த்தியையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 14 இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் மற்றும் கூடுதலாக 2,000 போலீஸாா் சனிக்கிழமை இரவு முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நிகழாண்டு நாடு முழுவதும் வரும் செப். 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, ஹிந்து அமைப்புகள், சமூக நல அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள் ஆகியவை பொது இடங்களில் விநாயகா் சிலைகளை நிறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
அதேவேளை, விநாயகா் சதுா்த்தியையொட்டி பாதுகாப்பு பணிகளையும் போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊா்வலப் பாதைகள், சிலை கரைப்பு நடைபெறும் பகுதிகள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் கூடுதலா 14 இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம், வாகனத் தணிக்கை, விதிகளுக்குட்பட்டு சிலைகள் நிறுவப்படுகிா, அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகள் கரைப்படுகிா என்பது கண்காணிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், விழாவையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் கூடுதலா 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூட்ட நெரிசல் ஏற்படும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊா்வலங்களின்போது பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Vinayaka Chaturthi: 14 new checkpoints in Chennai; an additional 2,000 police personnel deployed for security!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.