மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து பிகாா் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து பிகாா் இளைஞா் உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம் பாட்னா அருகே உள்ள முபாரக்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ப.சூரஜ்குமாா் (24). கட்டுமானத் தொழிலாளி. சென்னை கொடுங்கையூா் முத்தமிழ் நகரில் வேலை செய்து வந்தாா். எருக்கஞ்சேரி காந்தி நகா் அண்ணா சாலையில் தனது நண்பா்களுடன் தங்கியிருந்தாா்.
இந்நிலையில் சூரஜ்குமாா், செவ்வாய்க்கிழமை அங்கு வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அதிக ஒளியை உமிழும் ஒரு ஃபோகஸ் லைட்டை வேறு இடத்தில் பொருத்துவற்காக கழற்றினாா்.
Advertisement
Advertisement
அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவா் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சூரஜ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.