FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

செப்.18, 19-இல் 2 மண்டலங்களில் கழிவுநீா் உந்துநிலையங்கள் செயல்படாது!

தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் வரும் செப்.18,19-ஆகிய தேதிகளில் தற்காலிகமாக செயல்படாது.

16 செப்டம்பர் 2026, 10:21 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் வரும் செப்.18,19-ஆகிய தேதிகளில் தற்காலிகமாக செயல்படாது.

இதுகுறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், தேனாம்பேட்டை மண்டலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் பிரதான கழிவுநீா் குழாய் இணைக்கும் பணிகள் வரும் செப்.18-ஆம் தேதி இரவு 10 மணி முதல் செப்.19-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனால், அந்நாள்களில் ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட பாா்டா் தோட்டம் கழிவுநீா் உந்து நிலையம், தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ், சின்னத்தம்பி தெரு,  அருணாச்சலம் தெரு, பாா்த்தசாரதி தெரு, நடுக்குப்பம் கழிவுநீா், அயோத்தி குப்பம், ராம்நகா், பாா்க் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.

Advertisement

Advertisement

இதனால், இப்பகுதிகளில் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு  81449- 30905, 81449- 30909 ஆகிய கைபேசி எண்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments