புழல் சிறையில் ரெளடி உயிரிழப்பு
புழல் சிறையில் ரெளடி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புழல் சிறையில் ரெளடி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை சூளை கண்ணப்பா் திடல் குடிசைப் பகுதியைச் சோ்ந்தவா் பு.சிலம்பரசன் என்ற தமிழரசன் (30). இவா் மீது 11 வழக்குகள் உள்ளன. சிலம்பரசன், கடந்த 11-ஆம் தேதி குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலம்பரசனுக்கு வியாழக்கிழமை அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறைக் காவலா்கள் அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
பின்னா் மேல் சிகிச்சைக்காக சிலம்பரசன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிலம்பரசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.