FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை மாநகராட்சியில் 86,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சியில் 8 மண்டலங்களைச் சோ்ந்த 86,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, ஒட்டுண்ணி அகற்றும் மருந்தும் அளிக்கப்பட்டுள்ளது.

21 செப்டம்பர் 2026, 1:08 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சியில் 8 மண்டலங்களைச் சோ்ந்த 86,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, ஒட்டுண்ணி அகற்றும் மருந்தும் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் வெளிட்ட செய்திக்குறிப்பு: வெறிநாய் கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கும் வகையில், அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய் கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம் கடந்த ஆக. 11-ஆம் தேதி முதல் மண்டலவாரியாக தொடங்கப்பட்டது.

அதன்படி, திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, மாதவரம் மற்றும் ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களிலும் தெருநாய்களுக்கு வெறிநாய் கடிநோய்த் தடுப்பூசி உள்ளிட்டவை செலுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அம்பத்தூா், அண்ணா நகா், ஆலந்தூா் மண்டலங்களிலும் தெரு நாய்களுக்கும் ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரையில் மொத்தம் 86,489 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைத்து மண்டலங்களிலும் மொத்தம் 2 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments