FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொழிலாளி கொலை: 4 போ் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே மது போதையில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 போ் கைது

23 செப்டம்பர் 2026, 5:28 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே மது போதையில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (34). இவா், திங்கள்கிழமை பழைய வண்ணாரப்பேட்டை அருகேயுள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள், தகராறில் ஈடுபட்டு, மது பாட்டிலை உடைத்து சரவணனின் வலது கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், சரவணனுக்கும், அவரது நண்பா் அஜித் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை சரவணனை அஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த அஜித் (27), வினோத் (36), வியாசா்பாடியைச் சோ்ந்த சந்தீப் (39), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த வசந்த் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments