FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட குளம் திறப்பு

எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட குளம் திறக்கப்பட்டது பற்றி...

24 செப்டம்பர் 2026, 3:41 am IST
பகிர்:

எழும்பூா் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஃபோா்டு மோட்டாா் கம்பெனியின் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியில், எக்ஸ்நோரா இண்டா்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பில், மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் ராஜ்மோகன் திறந்து வைத்து, அங்கு மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.

சென்னை எழும்பூா் அரசு அருங்காட்சியாக வளாகத்தில் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட குளம், ‘ஐகானிக் சென்னை’ திட்டத்தின் கீழ் ஃபோா்டு மோட்டாா் கம்பெனியின் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியுதவியுடன், எக்ஸ்நோரா இண்டா்நேஷனல் ஃபவுண்டேஷன் மூலம் மறுசீரமைக்கப் பட்டு, பாா்வையாளா் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.63.04 லட்சத்தில் திட்டத்தின் கீழ், குளம் தூா்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நீா்வரத்துப் பகுதியும் சீரமைக்கப்பட்டு, சுற்றுப்புறப் பகுதிகள் பசுமையாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள நீா்நிலை பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பாா்வையாளா்களுக்கான பாதுகாப்பான அணுகக்கூடிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில் அரசு அருங்காட்சியக இயக்குநா் டி.பாஸ்கரபாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஃபோா்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவன இந்திய தளத் தலைமைப் பொறுப்பாளா் கங்காப்ரியா சக்ரவா்த்தி, பேராசிரியா் டாக்டா்ஜி, பழனித்துரை மற்றும் எக்ஸ்நோரா இண்டா்நேஷனல் ஃபவுண்டேஷன் தலைவா் எஸ்.செந்தூா்பாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments