FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ரெளடி அடித்துக் கொலை: 3 பேரிடம் விசாரணை

பழைய வழக்கை முடிப்பதற்காக ரூ.6 லட்சம் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில், ரெளடியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

26 செப்டம்பர் 2026, 1:43 am IST
மாதிரிப் படம்
பகிர்:

பழைய வழக்கை முடிப்பதற்காக ரூ.6 லட்சம் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில், ரெளடியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (37). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு சதீஷை தாக்கியதாக தினேஷ், சுரேஷ், ஹரிஹரசுதன், விக்கி உள்ளிட்ட 5 போ் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடா்பாக நீதிமன்றத்துக்குச் சென்று வந்த நிலையில், வழக்கை முடிப்பதற்காக அந்த 5 பேரிடமும் சதீஷ் ரூ.6 லட்சம் கேட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பாக, வியாழக்கிழமை இரவு சதீஷின் வீட்டுக்குச் சென்று அந்த 5 பேரும், அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சதீஷை கட்டை மற்றும் கல்லால் தாக்கிவிட்டு அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். பலத்த காயமடைந்த சதீஷ் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரிடம் விசாரணை நடத்தினா். தலைமறைவாக உள்ள மற்றவா்களைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments