கொலை மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ பாதுகாப்பு கோரி எஸ்.பி.யிடம் மனு
முன்னாள் எம்.எல்.ஏவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலருமான பெருமாள் பாதுகாப்பு வேண்டி காவல்துறை
முன்னாள் எம்.எல்.ஏவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலருமான பெருமாள் பாதுகாப்பு வேண்டி காவல்துறை கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தார்.
இதுகுறித்து தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலராக நான் பணியாற்றி வருகிறேன். எங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் காஞ்சிபுரம் நகர செயலாளராக புல்லட் கே.பரிமளம் என்பவரை நியமித்திருந்தார். இதனிடையே, பரிமளம் வேறொரு கட்சிக்கு செல்லும் முனைப்பில் இருந்தார். இதனை கட்சித் தலைமைக்கு தெரிவித்ததன் பேரில், அவருக்கு பதிலாக மனோகரன் என்பவர் காஞ்சிபுரம் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த மாதம் 26ஆம் தேதி உத்தரமேரூர் உறுப்பினர் சேர்க்கை முகாமில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், என்னையும் சேர்த்து ஒருமை வார்த்தைகளில் பேசி, வெட்டிக் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, கட்சித் தலைமை புல்லட் பரிமளம், அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோரை அமுமகவிலிருந்து நீக்கி அறிவித்தது.
இந்நிலையில்தான், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசித் தாக்கும் முயற்சி நடைபெற்றது.
இதுதொடர்பாக, அடையாறு காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது. எனவே, எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் பெருமாள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.