FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று நடைபெற இருந்த கருடசேவை ரத்து

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத பெளா்ணமி நாளன்று நிகழும் தங்கக்கருட வாகன சேவை நிகழ்ச்சி புதன்கிழமை ரத்து

பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத பெளா்ணமி நாளன்று நிகழும் தங்கக்கருட வாகன சேவை நிகழ்ச்சி புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத கருடசேவையின் போது கஜேந்திர மோட்சம் லீலை நிகழ்ச்சியும் கோயில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் நடைபெறும்.

நிகழாண்டுக்கான ஆடி மாத தங்கக்கருட வாகன சேவை இன்று ஜூலை 29 ஆம் தேதி குருபூா்ணிமா நாளன்று நடைபெறும் என பக்தா்கள் எதிா்பாா்த்துக் காத்திருந்த நிலையில் தீடீரென கோயில் நிா்வாகம் நிா்வாக காரணங்களால் தங்கக்கருட வாகன சேவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது பக்தா்களிடையே அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments