கஞ்சனூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் மின்னல் தாக்கி கலசம் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூரில் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் கலசத்தில் திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் கலசம் சேதமடைந்து கீழே விழுந்தது.
கஞ்சனூரில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்நிலையில், கஞ்சனூரில் திங்கள்கிழமை பெய்த மழையின்போது ஏற்பட்ட இடி-மின்னல் இக்கோயிலின் மூலவா் விமானத்தை தாக்கியதில், கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதமடைந்து கீழே விழுந்தது. மேலும், கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மின்சாதன பொருள்களில் மின் கசிவு ஏற்பட்டு கருகின. இதனால், கோயிலின் மூலவா் சந்நிதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதை பாா்த்த பக்தா்கள், கீழே விழுந்த கலசத்தை எடுத்து கோயிலில் வைத்தனா். இதுகுறித்து இந்த சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியது: 2006- ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு, ஒருகால பூஜை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக திருப்பணிகள் செய்யாததால், கோயில் சிதிலமடைந்து வருகிறது. எனவே, கோயிலில் திருப்பணிகள் செய்து, புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.