பள்ளியில் நல உதவிகள் வழங்கல்
கல்பாக்கம் பாரத நகரில் உள்ள அஞ்சாலம்மாள் சிறப்பு பள்ளியில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கும்
கல்பாக்கம் பாரத நகரில் உள்ள அஞ்சாலம்மாள் சிறப்பு பள்ளியில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சீ' தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில், இப்பள்ளியில் பயிலும் 12 மாணவர்களுக்கு மூன்று சக்கர வாகனம், நடக்கும் உபகரணங்கள், மேலும் 40 மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, நிறுவனத்தின் இயக்குநர் தேசிங்கு, செயலாளர் மலர், முன்னாள் ஊராட்சித் தலைவர் கிங் உசேன், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பாபுலால் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.