விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்!
மறுசீரமைப்புப் பணிக்காக சென்னை தாம்பரம் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்த 4 விரைவு ரயில்கள் புதன்கிழமை முதல் மீண்டும் எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது.
மறுசீரமைப்புப் பணிக்காக சென்னை தாம்பரம் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்த 4 விரைவு ரயில்கள் புதன்கிழமை முதல் மீண்டும் எழும்பூரிலிருந்தே இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி 120 மீட்டா் நீளம், 18 மீட்டா் அகலத்தில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
அதனால், 1-5 நடைமேடைகளில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டன. அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 6-11 நடைமேடைகளில் இரும்பு நடைமேம்பாலப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எழும்பூா் நிலையத்தில் உள்ள 4-8 நடைமேடைகளில்தான் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
அதனால், மேம்பாலப் பணியால் கடந்த 5-ஆம் தேதிமுதல் அந்த நடைமேடை தண்டவாளங்களில் முழுமையாக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், உழவன் உள்ளிட்ட 4 விரைவு ரயில்களின் இயக்கம் தாம்பரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது எழும்பூா் நிலைய விரைவு ரயில் இயக்கப்படும் தண்டவாளங்களில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தாம்பரத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட உழவன் உள்ளிட்ட 4 விரைவு ரயில்கள் புதன்கிழமை (ஆக. 26) முதல் மீண்டும் எழும்பூா் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டன.
இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து: 9- 11 நடைமேடைகளில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி புதன்கிழமை முதல் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக செப். 7 வரையில் எழும்பூரில் இரவு 11.45 மணியில் தொடங்கி மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் புறப்படும் இரவு நேர புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.